கொரானா எனும் கொள்ளை
நோய் மனிதனை கொலை செய்கின்றது,,,,,
ஆலயங்கள் எல்லாம் அடைத்தே கிடக்கின்றன…
சாமிகளெல்லாம் நம்போல் ஓய்வே எடுக்கின்றன
வானத்தில் இருந்துதான் விசக்கிருமி வந்தாதா
,சீனத்து மண் தான் எமக்கும் தந்ததா
மாநகரின் மாநாட்டுக் காரனின்
மடச் செயல் என்பார் சிலர்,,,,
கதியற்று நிர்பதற்க்கு மதியிருந்தும்
விதி என்பார் மற்றொரு பாலர்,,,,
பாவத்தின் சம்பளம் தான் மரண மென்போம்,
உண்மை,,,,உண்மை,,,,
தனித்தில்லாதது பாவம்,,,,
கைதீண்டுவதும், படி தாண்டுவதும் பாவம்,,,,
கூடாது என்ற போதும் கூடுவதும்,
கூட்டம் கூட்டுவதும் பாவம்,,,
தேடாதே என்ற போது தேடுவதும்,
வெளியில் ஓடாதே என்ற போது ஓடுவதும் பாவம் ,,,,
முகம் மூடாமல் ,இப்படியே தொட்டுத் தொடர்ந்தால்,,,,,
பட்டுப் படர்ந்தால் …..
தொற்றி விடுவதோடு கொரானா நமமை
தொடர்ந்து வரும் கதையாகும்,,,
நாடே ஓர் நாள் சிதையாகும்,.
கொரானா ஒன்றே விதை யாகும்,,,,
இதுவரை மருந்தில்லை இதற்க்கு
சொந்த பந்தங்களை மறப்பது ஒன்றே மருந்தாகும்
அண்டை வீட்டாரோடு அந்நியமாய்
இருப்போம் கொஞ்சநாள் அனைவரையும்,
பிரிந்தே கிடப்போம், கொஞ்சும் நாட்களை
விலக்கியே வைப்போம்,,,
தடைகளை தாண்டினால் இனி வரும்
நாட்களெல்லாம் தடைகளே தாண்டவம் ஆடும்,,,,
படி தாண்டா பத்தினிபோல் பத்திரம் மாய்
பத்தியம் காத்து, பக்தியோடு
தனிமை ஒன்றே வைத்தியம் என்போம்
தனித்திருப்போம் என சத்தியம் செய்வோம்
கொரானா வைக் கொல்வோம் உயிரை வெல்வோம்,,,,..