<==============================================================================================================>
சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............ >>>>>>>>>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>> -
<===============================================================================================================>
10 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரி ந்த தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன்..............----------========== >>>>>சொன்னவர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன்
<==============================================================================================================>
வலை பதிவை வா சிக்க...... வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் <<<<<<<<<<<<<<<<<<-----------------------------
<===============================================================================================================>

எனக்கு பிடித்த ”கவியரசன்”

எனக்கு பிடித்த ”கவியரசன்”
கவிக்கடல் கண்ணதாசன் (கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.. இதை உணர்ந்து கொண்டேன்.துன்பம்மெல்லாம் விலகும் கண்ணா......) )

Tuesday, May 20, 2008

"எண்ணும் எழுத்தும்"


திருப்பூரில்
"எண்ணும் எழுத்தும்" கோடைப் பயிற்சி

திருப்பூர்,மே.13
எழுத்து தெரியாத‌ குழ‌ந்தைக‌ளுக்கு எழுத்துக்க‌ளை க‌ற்றுக்கொடுக்க‌வும் , எண்க‌ள் தெரியாத‌ குழ‌ந்தைக‌ளுக்கு எண்க‌ளை க‌ற்றுக்கொடுக்க‌வும், 'எண்ணும் எழுத்தும்' என்ற‌ கோடைப் ப‌யிற்சியை த‌மிழ்நாடு முழுவ‌தும்யுரேகா இய‌க்க‌ம் தொட‌ங்கி வ‌ருகிற‌து.அதுபோல் இந்த‌ இய‌க்க‌ம் 'க‌ன‌வு'அமைப்புட‌ன் இணைந்து 'எண்ணும் எழுத்தும்' என்ற‌ கோடைப‌யிற்சியைபெருமாந‌ல்லூரில் தொட‌ங்கி உள்ள‌து.இதை எழுத்தாள‌ர் சுப்ர‌பார‌திம‌னிய‌ன்தொட‌ங்கிவைத்தார்.இந்த‌ தொட‌க்க‌ விழாகூட்ட‌த்தில் பெருமாந‌ல்லூர் நூல‌க‌வாச‌க‌ர் வ‌ட்ட‌ த‌லைவ‌ர் சுப்பு,க‌விஞ‌ர் சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன்,தொலைபேசி பொறியாள‌ர் சேக‌ர்,நூல‌க‌ர் ஜெய‌சித்ரா,யுரேகா ப‌ணியாள‌ர் செல்வ‌குமார்உள்ப‌ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்துகொண்ட‌ன‌ர்.

செய்தி: தினத்த‌ந்தி
13/05/2008



Saturday, May 10, 2008

க‌விதை

அன்புள்ள அப்பாவுக்கு
-





































-
-
-
-
-
-
-
-
-
-
-

--
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

அன்புள்ள அப்பாவுக்கு

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தந்தை போலொரு மனிதர் தரணியிலில்லை
ஐம்ப‌துஆண்டுக‌ள் அன்போடு வாழ்ந்தாலும்
ஐய‌மில்லை ய‌ய்யா உம் பாசம் பெரிய‌தையா
க‌ண்போல‌ வ‌ள‌ர்த்த‌ நீங்க‌ள் கண்,
க‌ல‌ங்க‌ விட்டுக ‌ண‌வ‌ன் பிரிவால்
க‌ல‌ங்கும் என் தாயின்க‌ண்ணீரை க‌ண்டீரோ?
காணாது சென்றீரோ?
அந்த‌ நாள் நினைவுகளும் எங்களோடு
வாழ்ந்த ‌அந்த‌நாள் ஞாப‌க‌ங்கங்களும் !
நிழலாடு கின்றதையா !
அன்பை பொழிந்துவிட்டு
அன்னையாய்யாக்கிட்டு
அன்பை சுமந்து
அல்லல் படும்படியாய்
ஆக்கிட்டுச்சென்றீரோ!!
அவ‌ச‌ர‌மாய் சென்றீரோ!
ஐந்தாறு மாதங்களில்
அவிந்து விடும் அவர்
நினவு பதினாறுக்கு வந்தாரும்
சொன்னார்கள்வாயார‌ அழுதார்க‌ள் !
ஆண்டுக‌ள் ப‌ல‌ ஆயினும்
உம் நினைவுக‌ள் அழிய‌வில்லை
எம் நெஞ்ச‌மும் மற‌‌க்க‌வில்லை!
த‌வ‌ருக‌ள் செய்த‌ போது
எனை த‌ண்டித்தீர்க‌ள்
த‌ரங்கெட்ட‌ வார்த்தையில்
திட்டிய‌போது எனை
ம‌ன்னித்தீர்க‌ள் அன்று வாங்கிய
அடிகளால் உடல் நொந்தது
இன்று வாங்கிய அடியால்
உள்ளம் நொருங்கியது!
தந்தை சொல் கேட்ட தணையன்
தரங்கெட்டு போனதில்லை,
த‌ந்தை வ‌ழி ந‌ட‌ந்தோன்
ம‌ன‌ங்கெட்டு போன‌தில்லை !
நீர் இல்லாத‌ வாழ்க்கை
நீரில்லா மீன் போலானது!
நீரில்லா நீறோடையில்
நீந்துவதற்கு "நீர்" இல்லையே!





அன்புள்ள அப்பாவுக்கு
-----------------------------------------------------------------------
தாயிற்சிறந்த கோயிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தந்தை போலொரு மனிதர் தரணியிலில்லை
என் தந்தை உமை பற்றிய நினைவுகள்
நீங்கவில்லை கனவுகளும் ஓயவில்லை
அந்த நாள் நினைவுகளும் எங்களோடு
வாழ்ந்த அந்தநாள் ஞாபங்கங்களும் !
நிழலாடு கின்றதையா ! நெஞ்சத்தில்
கனவாகிப் போனதய்யா!
நின் தாயின் ஊரிலேதான்
என் தாயைக் கண்டெடுத்தீர்,
என் தாயின் ஊரினிலே
வாழ்க்கையை தொடங்கிட்டீர்
ராஜம்மா எந்தாயை தாரமாகிக்யபோதே
ராஜாவா ஆனீங்க ராசனாகவே வாழ்ந்தீங்க
இவர் போல துணிதைக்க யாருஇகுக்கா
ஊருக்குள்ள ! என்ற பேரு பெற்றீங்க ,
நல்ல பேரும் பெற்றீங்க நாகரீகமா வளந்தீங்க
ஏற்றமானா வாழ்க்கையில
எங்கநாலு பேரை பெற்றீங்க
என் அன்னை, தன் தமக்கையின்
மகனையும் தன்மகன் போல்
வளர்த்துவர நால்வரோடு ஐவரானோம்
நாங்க ஒண்ணா வளர்ந்து வந்தோம்
1975 களில் எடச்சுளார் கடை என்றால்
ஏகப்பட்ட மவுசு அந்தக்காலத்தில்
மளிகை கடை நடத்தும் போதே
மக்கள் சொன்ன  யோசனை கேட்டு
புகையிலை வியாபாரத்தை
புதுசா தொடங்கினீங்க
ஊரில் பலபேர், வேலைக்கும் வந்தாங்க
விருப்பமா வேலையுஞ் செஞ்சாங்க
கோவையிலே வெட்டிய புகைஇலை
கொத்துக்கொத்தாய் கொண்டுவந்து
வண்டியில் இருந்து இறக்கி போட
வந்தவங்க  எத்தனை பேர்?
ரெண்டு மூணு இலைகளை
தலைகீழா பிடித்துத் தூக்கி
பனை இளங்கீற்றினிலே பக்குவமாய்
முடிச்சி போட முன்வந்தவங்க
எத்தனை பேர்?

சுள்ளயில உள்ளபோய் பட்டியலில்
கட்டியவங்க பட்டியலில் எத்தனை பேர்
பச்சயாய் இருந்த இலை கருப்பாய் ஆனபின்னே
முடிந்த முடிச்சி களை அவிழ்க்க
முன் வந்தவங்க எத்தனைபேர்
அவிழ்ந்த இலைகளை பின்
நெட்டை தலையாய் வைத்து
முடிமுடியாய் கட்டவந்தமுதியவர்கள்
எத்தனைபேர்
முடித்த முடிச்சுகளை  மூழ்கிஎடுக்க
கடல் நீரைக் கொண்டுவர
காளை பூட்டிய களையர்கள்
எத்தனைபேர்
தலை முடிபோல் பொதிந்த புகையிலையை
கத்தையாய் கட்டிவிட இளங்கன்னியர்கள்
எத்தனை பேர்
சிப்பங்களாய் கட்டிவிட்ட
சிப் பாய்கள் எத்தனை பேர்
டெய்லராய் இருந்தபோது காஜா போட
வந்த காளையர்கள்  எத்தனைபேர்
எத்தனை பேர் வந்தாலும் அத்தனை
பேருக்கும் வேலை கொடுத்தீர்
மாமனாரும் துணைக்கு இல்லை
மைத்துணரும் துணையில் இல்லை
உம் உழைப்பால் நீர் உயர்ந்தீர்……..
ஊருக்கே உத்தமர் ஆனீர்……
யார் கண்பட்டதோ ,ஊர்கண்தான் பட்டதோ
புகையிலை புகை-இலை ஆனாது
பூக்காத புகையிலை பூத்துப்போனது
நாட்டமாக  செய்ததொழில்
நட்டம் வந்ததென நாலுவயலையும்
வந்த விலைக்கு வித்தீங்களெ
நமக்கு பணம் தரவேண்டியவர்கள்
பணம் தந்தாலே இன்னும்
நாலு வயல்வாங்கலாமே
நம் கடை பாக்கி கொண்டவர்களிடம்
வசூல் செய்திருந்தால்
பலமகசூல் பெருகியிருக்குமே!
சொத்துக்காக சொந்தங்கள் பகைத்தன
சொந்தமே சூனியமும் வைத்தன
நீர் நட்பையும் சொந்தத்தையும்
பெரியதாககருதியது  சமீபத்தில் தான்
எனக்குப்புரிந்தது,
1970 களில் எழுதப்பட்ட பழைய கடிதங்கள் கிடைத்தன
மாமனாரும் மைத்துணரும் எழுதிய கடிதம் அது ,
ஒன்றில் பாசமிருந்தது மற்றொன்றில் வேசம் இருந்தது
ஒன்றில் விசயம் இருந்தது
இன்னொன்றில் விசமம் இருந்தது
அதே ஆண்டுகளில் உங்கள் நண்பர் எழுதிய
கடிதமும் பலகிடத்தது
சாமிக்கு நிகராகவே உங்களை வர்ணித்திருந்தார்
அவர் படித்த படிப்பு கூட உங்கள் செலவாம்
அவரே எழுதியிருந்தார்….
இப்படி எல்லோருக்கும் நல்லவராய்
இருந்து கொண்டு எல்லோரிடமும்
அன்பை பொழிந்துவிட்டு நாங்கள் உங்கள்
அன்பை சுமந்து அல்லல் படும்படியாய்
ஆக்கிட்டுச்சென்றீரோ!! அவமாய் சென்றீரோ!
நாளெல்லாம் உழைத்ததால் களைத்தீரோ
உரங்காமல் சென்றீரோ
எங்கே இருக்கின்றீர் எப்படி இருக்கின்றீர்
எங்கெல்லாம் தேடுகின்றோம்
என்றென்றும் உம் நினைவால் வாடுகின்றோம்
நீர் இறந்தசெய்தி கேட்டு ஊரே
திரண்டு வந்து ஒப்பாறிவைதனரே!
ஓயவில்லை அந்நினைவு
ஐந்தாறு மாதங்களில் அவிந்து விடும் அவர்
நினவு என பதினாறுக்கு வந்தாரும்
சொன்னார்கள் வாயார அழுதார்கள் !
ஆண்டுகள் ஆயினும்

உம் நினைவுகள் அழியவில்லை
எம் நெஞ்சமும் மற‌‌க்கவில்லை!
ருகள் பல செய்த போதும் எனை

ன்னித்தீர்கள், தன்மானம் ஒன்றையே
மதிக்கவேண்டுமென கர்பித்தீர்கள்
தந்தை சொல் கேட்ட தணையன்
தரங் கெட்டும்  போனதில்லை,
ந்தை ழி ந்தோன் என்னும்

ங்கெட்டும்  போனதில்லை !
நீர் இல்லாத இவ் வாழ்க்கை

நீரில்லா மீன் போலானது!
நீரில்லா நீறோடையில்

நீந்துவதற்கு "நீர்" இல்லையே!



என் தாய்
-------------‍






















உயிருக்குள் உயிர் வளர்தாய்
உலகத்தையே பார்க்கவைத்தாய்
ஊனிற்க்கு உதிரம் கொடுத்தாய்
உன்னில் எனைப் பார்த்தாய்
அறிவுக்கு அறிவு கொடுத்தாய்
அன்புக்கு அன்பை கொடுத்தாய்
கண்ணின் கரு விழிதந்தாய்
காலால் நடக்க வைத்தாய்
கைகளால் செயல் படவைத்தாய்
காதின் ஒலியால் கேட்கவத்தாய்
நினைவில் என்றும் நினைக்க‌ வைத்தாய்
நித‌மும் பேசும் வார்த்தை தந்தா‌ய்
வெண்ணில‌வாய் குளிர்தந்தாய்
வெண்பனியாய் வெப்பம் தணித்தாய்
தென்றல் போல் சுகம் தந்தாய்
தேனீர் போல் சுவை த‌ந்தாய்
திக‌ட்டாத‌ இன்ப‌ம் த‌ந்தாய்
இத்த‌னையும் த‌ந்தாய்
நானுன‌க்கு என்ன‌ த‌ந்தேன்!
என்னை த‌ந்த‌வ‌ளுக்கு
என்ன‌ த‌ந்தால் ஈடாகும்!அம்மா!







சுனாமி"
---------




கடற்கரையில் கட்டிய மணல் வீடுகள்
கடல் அலைகளால் அழிவதைக்
கண்டிருக்கிறேன்
பேரலை வந்து வீடுகளியும்
அழித்தபேரளிவை அன்றுதான்
கண்டேன் ! பெளர்ணமியன்று
கடல் கொஞ்சம்கொந்தளிக்கு
மெனச்சொன்னார்கள்
மூர்கத்தனமான கொந்தளிப்பால்
மூர்ச்சையானது எத்தனை
உயிர்கள்யாரையோ தேடித்தேடி
அவர் வராததால்கரைவந்து
திரும்புகிறாய் எனகண்ணியமாய்
நினைத்தேன் ஆனால்நீதேடிய
உயிர்களும் உடல்களும்
உடமைகளும்தான் எத்தனை
எத்தனை !உன் அலைகளை
எம்மக்கள்பார்த்துரசிப்பதால்
தான் அடிக்கடிவந்து போகிறாய்
என வாஞ்ஞையோடு இருந்த
என்னை வஞ்சித்து விட்டாயே
கடல் அலைபோலத்தான்
மனிதவாழ்கையும் இன்பமும்
துன்பமும் வந்துவந்துபோகு
மென பெரியோர்கள் சொல்ல
கேள்விஅதனால் தானோ
என்னவோஅமைதியாய்
வாழ்ந்த எம் மானிடஉயிர்களை
சுனாமி என்ற பினாமியால்
வந்து வந்து போக வைத்தாயே
மக்கள்கூட்டம் அதிகமானால்
அலைகடெலென கூட்டம்
என்போம்அதனால் தான்
அலையால் கூட்டம்கூட்டமாய்
கொன்றுகுவித்தாயோ!
என் சமுதாயத்தில் ஒரு
உயிர்போனாலும் ஓரயிரம்
சடங்குகளும் சம்பிரதாயங்களும்,
சட்டதிட்டங்களும் ஆனால் அன்று
உன் கோரப்பசியால்
உயிரை உணவாக்கி
உடலைகழிவாக்கியனாயே!
உன்னால் உயிர்போன உடல்களை
ஒரேகுழியில் ஒரேசடங்காய்
போட்டுபுதைத்தகாட்சிக் கொடுமையை
என்னவென்றுசொல்வேன்
எப்படித்தான் மரப்பேன்
சாவதர்காகத்தான் பிறந்தோ
மென்றாலும்எதையாவது
சாதிக்கத்துடிக்கும்என் சமூகத்தை
உனக்கேற்ப்பட்டதாகத்தால்
தண்ணீரால் உயிர் குடித்தாயே!
சித்தர்கள் வாழ்ந்திட்ட சிங்கார
பூமியிலே புத்தனும் வாழ்ந்திட்ட
புண்ணிய பூமியிலே எத்தர்கள்
ஏகம்பேர் இருக்க பாவம்
ஏழைகளை பார்த்து ஏவல்தனை
புரிந்தாயோ! உன் கோரப்பசி
எனும் கொடும் பார்வை என் மீது
படாததால் உயிர்தப்பினேன்!
என் ஒருவன் உயிர் தந்திருந்தால்
நீ பலி எடுத்த உயிர்களை
விட்டிருப்பேன்எனச் சொல்லி
இருந்தால் ஓடோடிவந்து
உன் காலடியில் மாண்டிருப்பேன்!
குடந்தையில் கருகிய குஞ்சுகளால்
ரணம் இன்னும் ஆரவில்லை
அதர்குள்வெந்த புண்ணில் வேல்
பாச்சினாயே!தாண்டவம்
கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆனால் அன்று நீ ஆடிய
"கோரத்தாண்டவம்"இதுவரை
பார்த்ததில்லை இனியும்
பார்க்க விருப்பமில்லை
ஆர்ப்பரிக்கும் அலை களால்
ஆள்பரிக்கும் அவலமினி
வேண்டாம் இனியும் தலை
தூக்கவேண்டாமென தயவாய்
வேண்டுகிறேன்!
(சுனாமியின் போது எழுதிய கவிதை)


வேதனை
குடந்தையில் கருகிய குஞ்சுகளை
கண்டபோது வேதனைசுனாமி
என்றகொலைகாறலையின்
பினாமியைகண்டபோதும் வேதனை
அஞ்சுபூதத்தின் அட்டகாசத்தை
விட ஆரறிவு பூதத்தின் அடாவடியால்
வேதனையோ வேதனை



மனிதனின் மாண்பு
=========================


மனிதன் இவனொரு மகத்தா பிறவி

மண்ணில் இவனொரு புண்ணிபிறவி
கூடிவாழ்வது தான் இவனது பழமை
குடித்து வாழ்வது தான் இவனது புதுமை
கொடுத்துக்கொடுத்தே வாழ்ந்தவன்
கெடுத்திக் கெடுத்தே வாழ்கின்றான்
புறாவில் தூதனுப்ப தொடங்கியவன்
புதுபுது தூதுகள் நிதம்
தினம் படைக்கின்றான்
குரங்கிலிருந்துதான் பிறந்தோம்
என்பதை தன் குணங்கொண்டே
அவ்வப்போது உணர்த்துகின்றான்
கொலையும் கொள்ளையுமே
கொள்கையாக்கியவன்
வலையை விரிப்பதையே
கலையாக்கிக் கொண்டான்
விலைகொடுத்தே பட்டமும்
பதவியும் பெறுகின்றவன்,
துப்பாக்கியும் தோட்டாவுமே
துணைக்கு வைத்திட்டான்
அதிகாரம் கொண்டவன்
சதிகாரனாகவே உள்ளான்
இலவசங்கள் பல உண்டென்பான்
இவன் வசமுள்ள  ஓட்டுக்காக
பதவிக்கி வந்ததுமே
பழைமைதனை மரப்பான்
பரிதவிக்க விட்டுடுவான்
பாமரனை… ..
ஓட்டிட்டவனை
ஓட்டாண்டியாக்கிடுவான்
விசுவாசி நானென்பான்
விலைவாசியை ஏற்றிடுவான்
மின்வெட்டை அதிகரித்து
கல்வெட்டில் காவியம்படைப்பான்
மானத்தின் உச்சமென
பிறந்தவன் அவ மானத்தின்
அச்சமென ஆகிவிட்டான்
கர்மவீரனை கூட தோற்கடித்தவன்
மாவீரனையும் மண்டியிடச்செய்தான் .
மனிதமாண்பு பற்றிப்பேசுகையில்  
மகாத்மா ஒருவரையே
தன் மனதினுள்: புதைத்தான்,
அவரையும் வாழவிடாது
கொன்றே புதைத்தான்,
அவர் கொள்கையாவது
வாழவிட்டு மனித மாண்புதனை போற்றுவோம்!

 

அன்புடன்
ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன்

அவள் காதல்
-------------------
கனவுக்கு இதமான அவள் காதல்
மனதுக்குவேறுவிதமானது !!
உடலுக்கு சிகையான அவள் காதல்
உறவுக்கு பகையானது !
இன்பத்தின் தேடலான அவள் காதல்
துன்பத்தின் பாடலானது !
எண்ணத்தில் கூடலான அவள் காதல்
ஏக்கத்தில் ஊடலானது!
சம்சாரமாக்க துடித்த அவள் காதல்
மின்சாரமானது !
ஜாலியாக போன என் காதல்
நான் காலியாக காரணமும் ஆனது!

அடுத்த(அ)வள்(ன்)
-----------------------
தென்றலின் இனிமை கொண்டவள்
தேனீர்சுவையை தந்தவள்வந்தவள்
என் மனதில் நின்றவள்
வானத்து நிலவின் ஒளிகொண்டவள்
என்னவள் என்றவள்
அடுத்தவ(ள்)ன் நாகிவிட்டாள்


இன்றைய காதல்
==============
மனம் வசப்பட்டதால் ஏற்பட்ட காதல் -அன்று!
சதைவசப்பட்டதால் ஏற்பட்ட காதல் - இன்று
அன்றய காதல் கல்லறயில் அல்லது
கல்யாணத்தில் முடியும்!
இன்று சில்லறையில் அல்லது
சில அறையில்!முடியும்!

இ)தையல் வலி
--------------------
உன் பார்வையெனும் ஊசியில்
என் அன்பெனும் நூல் கோர்த்து
நம் இருவர் இதயத்தையும்ஒன்றாய்
தைத்தாய்தைத்த நீயே!
பிரித்து விட்டாய்!
தைத்த போது வலிக்காத இதயம்
தையல் பிரித்தபோது வலிக்கிறதே!!!


மாற்றம்
-----------
காலங்கள் மாறலாம்
நாகரீக கோலங்கள் மாறலாம்
ஆனால் நம்காதல் மட்டும் மாறாது
என கனிந்த மொழி பேசியவள்
கடைசியில் என்கணவன் மட்டும்
மாறலாம் என் கணிசமாக
கூறிவிட்டாள்!

காதல் + நீ = காதலி
----------------------------------------
முந்தானை முடிப்பினிலே
முடிந்து வைத்த முக்கனி போல்
சந்தனத்தில் சவ்வாதை
சமமாக சேர்த்ததுபோல்
செவ்வாழைக் கனியினிலே
செய்துவைத்த செந்தூரம் போல்
சங்கீத சன்னதியில்
சந்தங்களை கோர்த்தது போல்
சிந்துகின்ற வான்மழையும்
தங்குகின்ற தாமரையே!
ஏங்குகின்ற என்மனதில்
தூங்குகின்ற தூரிகையே!
பார்த்து நிற்க்கும் என் விழியை
காக்கவைக்கும் காரிகையே!
என்காதல் தனை
சொன்ன பின்னும் உன் காதல்
கண்பாரா காதலியே !
உன்முகத்தில் தெரியுதடி
ஓராயிரம் ஒளிநிலவு
காதலெனும் கனிரசத்தை
என்மீது கொட்டுவாயோ !
துளியளவு!
என் காதலியாய் நீ ஆகிவிட்டால்
என்மனைவியாய் நான் ஆக்கிடுவேன் !!!




என்னவன்

------------
‍‍‍‍‍‍‍‍‍என்னவனே என் மனதை
கொள்ளை கொண்டவனே
மன்னவனே என்னுயிரை
மீட்டுத்தந்தவனே
உன் புகழை பாடுதற்கு
உரியவள் என்றும் நான்தானே
தேனமுதில் பிழிந்தெடுத்த
தெள்ளமுதும் நீதானே
பாலமுதில் கடைந்திட்ட‌
வெண்நெய்யும் நீதானே
சிங்கமென நீ நடந்து
சிரித்துவரும் வேளையிலே
தங்கமென தாவணிகள்
தானாகவே வந்தாலும்
தடுக்கிவிழா பார்வை
தனை தரணியங்கும்
படைத்திட்டாய்
கன்னியரின் பார்வையிலோ
காளையர்கள் அழிந்திடுவ‌ர்
என் க‌ண்ண‌னுன் பார்வையிலோ
கன்னிய‌ர்க‌ள் வழிந்திடுவ‌ர்
வான‌த்தில் இருப்ப‌தோ
ப‌ல‌ந‌ட்ச‌த்திர‌ம் என்
ம‌ன‌வான‌த்திலோ
நீ யொரு துருவ‌ ந‌ட்ச‌த்திர‌ம்
குடிப்ப‌ழ‌க்க‌ம் இல்லா நீ
ந‌ல்ல‌குடிப்ப‌ழ‌க்க‌ம்
உள்ள‌வ‌ன் மான‌த்திற்கு
மானைச் சொல்வ‌ர்
உன் த‌ன்மான‌த்திற்கு
ய‌த‌னைச் சொல்வேன்
க‌ண்ட‌வ‌ள் பின் செல்லாது
எனைக்க‌ண்ட‌ பின்
காத‌ல் கொண்டாயே
மாற்றாளுக்கு ம‌னைவியெனும்
மாங்க‌ல்ய‌த்தை
பூட்டி விட்டால் மான‌த்தோடு
மாண்டிடுவேன் மாம‌னுன் காத‌லியாய்!





ச‌ண்டாளி!





கருவிழிகளின் மின்னல் கீற்றுகளாய்
கண்டவளின் கண்கவர் கண்களில்
வண்ணத்துப் பூச்சிகளும் வட்டமிட
வண்டுகளும் மலெரென்று மொய்த்துவிட
நான்மட்டும் விழாதிருப்பெனோ !
நானும் விழுந்துவிட்டேன்
விண்ணவள் கண்ணுக்குள் !
நிலவவள் நெஞ்சுக்குள் !
பார்த்தோம் ப‌ழ‌கினோம்பாச‌ம்
ப‌கிர்ந்தோம்தாகம் தணிக்கவே
தனிமை நாடினோம் காத‌ல்
தாக‌த்தால் க‌ட்டிய‌ணைத்து
முத்த‌மிட‌காட்டிய‌ அவ‌சரத்தில்
காத‌லிய‌வ‌ள் சொன்னாள்
க‌ல்ய‌ண‌ம் ஆக‌ட்டும் மென்று
காத்திருந்தேன் ம‌ணிக‌ண‌க்கில்
பாத்திருந்தேன் நாள்க‌ண‌க்கில்
பெண்பார்க்கும் ப‌ட‌த்தில்
பித்தலாட்டம் செய்துவிட்டாள்
க‌ண்ட‌ அவ‌னை க‌ண‌வ‌னென்றாள்
காத‌ல‌ன் எனை க‌ள்வ‌னென்றாள்
வ‌ண்டாய்சுற்றிய எனக்கு வ‌ண்டாள்
தந்த பட்டம் பைத்தியமென்று
ஏனென்ற‌ போது நீ என் சாதி யில்லை
ம‌த‌மும் இல்லை என‌வே
ந‌ம் திரும‌ண‌த்தில் ச‌ம்ம‌த‌மும்
என‌க்கில்லை என்றாள் ச‌ண்டாளி!




என்றும் நீ என்னோடுதான்
சொந்தங்களே சுமையானது
சோகங்களே சுகமானது
பந்தங்களே பகையானது
பாசங்களும் பகல் வேசமானது
நெருங்கிய உறவுகளும்
நெருங்காது போனது
விரும்பிய உறவுகளும்
விரும்பாது போனது
கனிந்த காதல் கூட
கசந்து போனது
நோய்களும் நொடிகளும்
நோகாமல் உள்ளன
பசியும் பட்டினியும்
பகையில்லாது போனது
சமுதாயம் என்பார்வையில்
சங்கடமானது
ஏமாற்றும் ஏமாற்றமும்
ஏகமாய் உள்ளது
குண்டுகளும் தோட்டாவும்
குறிபார்த்தே இருக்கின்றன
கொலையும் கொள்ளையும்
கொள்கையாகிவிட்டன
உலகம் உள்ளங்கைக்குள்
சுருங்கியது போல்
மனித மனமும்
சுருங்கிப்போய்விட்டது
நிழல் தேடும் மரங்களே
நிஜமாகி போனது
இத்தோடு முடிந்ததா?
என்றால் பத்தோடு
பதினொன்றாய் வருமையும்
சொன்னது "என்றும் நீ என்னோடுதானென்று"





பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
பாட்டுக்கொருவ‌ன் பார‌தி பிற‌ர்
பாட்டுக்குள்ளும் ஒருவ‌ன் பார‌தி
வீட்டுக்குள் அடிமை கொண்டவள்
வீட்டை விட்டு வெளியில் வரக்கண்டான்
ஏட்டை தொட்டால் தீமை எனற நிலை மாற்றி
ஏட்டையும் பண் பாட்டையும்
பாடுத‌லாய் கண்டான்
மாட்டை கட்டியது போல்தொழுவில்
பார்த்தவளை மாடு என்ற சொல்லே
செல்வம் என பொருள் கண்டான்
கர்புக்கு பெண்ணை ஒப்பிட்டாலும்
பெண் பாட‌ம் க‌ற்பிப்பதாய்
க‌ன‌வு க‌ண்டான்
காத‌லும் சாதியும் பெண்டிற்கில்லை
என்ற‌வ‌ன் காத‌லில் க‌னிந்து பெண்காவிய‌ம்
ப‌டைக்க‌க்க‌ண்டான்
ப‌ட்ட‌ங்களையும் பாட
திட்டங்களையும் பயின்றதோடு
ச‌ட்ட‌ங்க‌ளையும் ஆணுக்கு
ச‌ரியாக‌ ஆழ‌க்க‌ண்டான்
விட்ட‌த்தை பார்த்தேவிட‌லை
ப‌ருவ‌ம் க‌ழித்த‌வ‌ள்
திட்டம் போட்டுவாழ்க்கையை
திருத்திடக்கண்டான்
சுதந்திரக்கனவு சுந்தரமாய்
பலித்ததுநிர‌ந்த‌ர‌ க‌ன‌வுக‌ளும்
நிம்ம‌தியாய் ப‌லித்த‌து
பெண்ணுக்காய் க‌ண்ட‌க‌னா
புதுமை பெண்ணுக்காய்
அமைந்த‌த‌ன்றோ! ! !





காலம் மாறிப்போச்சு:
அம்மிகள் காணாது போனதோடு
அம்மாக்களும் காணாது போனார்கள்!
மம்மியாய் வாழ்கின்றவர்கள்
வாடகைக்கும் தாயாக
கிடைக்கின்றனர் !
கணினி என்பது மனிதவாழ்வில்
கணிசமான அங்கமாகிவிட்டது!
கணினியை கற்போர்காமத்தையும்
பயிலுகின்றனர்!
மென்பொருள் நிருவனங்களில்
படுக்கையறைகளும்
பதுங்கியிருக்கின்றனவாம்!
திரைப்படங்களெல்லாம்
திரை யில்லாபடங்களாகவே
காட்சியளிக்கின்றன!
தமிழ்பாடல்களில்ஆங்கிலமே
அதிகமாயிற்று!
அங்கங்களை மறைத்த
ஆடைகள்அங்கங்கு மறைப்பதால்
ஆபாசமாகவே இருக்கின்றன!
குட்டிகளுக்கெல்லாம் புட்டிகளே
பாலூட்டுகின்றன!
பாலூட்ட படைத்தவையே
படு கவற்சியாக்கப்படுகின்றன!
ஆ_வின் பாலெல்லாம்
ஆவி இல்லாபாலாக அங்கங்கே
பெட்டிகளிலும் பைகளிலும்
கிடைக்கின்றன!
வியாபாரத்திற்கு,
விளம்பரம்என்பது போய்விளம்பரமே
வியாபாரமாக்கப்படுகின்றன!
அசல் என்ற உண்மை
போய்பொய் போலிகளே
புரள்கின்றன!
பொன் நகை என்பது
பெண் நகையாகிவிட்டது !
குங்குமத்தில் வைத்த
பொட்டுநிறம் மாறியதோடு
வடிவமும்மாறி ஒட்டவசதியாய்
பசையாக்கப்பட்டுள்ளது!
பெண்கள் ஆண்களின்
உடையிலேயே அலாதியாய்
உள்ளனர்!
உடன்உறவுக்குள் உடனிருந்து
மகிழ வேண்டியவர்கள்
உடல் உறவுக்குள்ளே
உல்லாசமயிருக்கின்றனர்!
துச்சாதனர்களே காவலுக்கு
களமிறக்கப்படுகின்றனர்!
லட்சியம் என்பது லஞ்சமாகவும்
லச்சமாகவும் மாறிவிட்டன!
பிறக்கும் குழந்தை கூட கை
விரலுக்குள் கை பேசியை
மறைத்துவைத்துள்ளன!
பள்ளிகளிலும்பள்ளியறை
உள்ளதாம்!
குடிப்பதும் புகைபதும்
புனிதமாகிவிட்டது
இயந்திரதில் கூடஇதயம்
இயங்குகின்றனவாம்
மனிதனே மனிதனை
கொல்லும் மனிதாபிமானம்
மலிந்துவிட்டது!
உலகம் நாடகமேடையாம் ,
மக்கள்நடிப்பதையே
வாழ்க்கையாக்கிட்டார்கள்
காலங்கள் மாறலாம்,
நாகரீககோலங்கள்மாறலாமா?
இந்தக்கால மாற்றங்களுக்கு
வரும் காலங்களே!
பதில்சொல்லட்டும்-





என் விருப்பமும் திருப்பமும்
-------------------------------------
விருப்பம் இது கொஞ்சம் விசித்திரமானது !
பூத்துக்குலுங்கும் ரோஜா மலரில்
தேன் உண்ண வண்டுக்குவிருப்பம்!
பூவையர் கூந்தலில் இருந்து
சிரிக்க அந்த ரோஜாவுக்கு விருப்பம்!
என் எண்ணங்களில் தோன்றிய
விருப்பங்களை எடுத்துக்கூற
எனக்கும் கொஞ்சம் விருப்பம் !
அதிக‌ம் ப‌டித்து ப‌ட்ட‌ம் பெற‌ விருப்ப‌ம் !
ஆனால் ஏழ்மையால் ஏற்ப‌ட்டதோ திருப்ப‌ம் !
ப‌டித்த‌ ப‌டிப்பிற்கேற்ற‌ ப‌த‌வி பெற விருப்ப‌ம் !
ஆனால் ல‌ஞ்ச‌ம் என்றசொல்லால்
ஏற்ப‌ட்ட‌தோ திருப்ப‌ம் !
வேலை யில்லாத்திண்டாட்ட‌த்தை
ஒளித்திட‌வும் விருப்ப‌ம் !
ஆனால் வேலை தேடுவ‌தே
வேலையானால் ஏற்படுமோ திருப்ப‌ம் !
நான் காத‌லித்த‌ அவ‌ளை கை
பிடிக்க‌ விருப்ப‌ம் !
ஆனால் ஜாதி என்ற‌ சாக்க‌டையால்
ஏற்ப‌ட்ட‌தோ திருப்ப‌ம் !
வ‌ர‌த‌ட்ஷ‌னை இல்லா திரும‌ண‌த்தில்

தான் விருப்ப‌ம் !
ஆனால் த‌ட்ஷ‌னை வேண்டாமென்றதால்
ஏற்ப‌ட்ட‌தோ திருப்ப‌ம் !
போதையால் பாதை மாறிப்போவோரை
திசைதிருப்பவும் விருப்பம்!
ஆனால் போதையே அவனுக்குப்
பாதையானால் ஏற்படுமோ!
திருப்ப‌ம் ஊழ‌ல‌ற்ற‌ ஆட்சியில்
தான் என‌க்க்கு விருப்ப‌ம் !
ஆனால் ஊழலே ஆட்சீயானால்
நாட்டில் ஏற்படூமோ நல்ல திருப்பம் !
என் விருப்பங்க‌ள் யாவும் நிரைவேறினால்
நல்ல‌ திருப்ப‌ங்க‌ளும் உருவாகுமே. . . . . . !





பொன் மானைத் தேடி..............
பொன்மானாய் தேடி வந்தோம் அது
பொய்மானாய் போய் விடுமோ !
பொற்குவியாய் நாடி வந்தோம் அது
வெற்குவியாய் ஆகிடுமோ !
பொற்கிளி தான் என எண்ணி , யதை
பொத்தி பொத்தி வளர்த்து வந்தோம்
வளர்ந்து வந்தது பைங்கிளியாய்
”கைக்” குரங்கிடம் சிக்கிடுமோ !
BSNL – லில் வேலை இது
பத்திர  மானதுதான் என எண்ணி
பணிந்து பணிந்து தான்பணி செய்தோம்
பத்திர மாய் நினைத்த தின்று வெற்றுப்
பத்திர மாய் போய் விடுமோ !
BSNL – இது பொன்முட்டை யிடும் வாத்து,
என பார்த்துத்தான் பணியில் சேர்ந்தோம் அதை
பொருக்காத நிர்வாகமும்  பொல்லாத அரசாங்கமும்
பொசுக்கித்தான் போட்டிடுமோ ! ”பங்கு” போட்டு
தின்று தான் தீர்த்திடுமோ !
பத்தோடு பத்து சேர்ந்த ஆண்டுக்குமேல்
பற்றோடு பகலிரவாய் பாடுபட்டு ,,கம்பம் நட்டு ,
கம்பி இழுத்து ,கடும் குழிகள் பல தோண்டி விட்டு ,
கேபிள்களின் பிணிதீர்த்து ,கணினியும் கற்றுத்தோய்ந்து
வலைத்தளங்களும் வடிவமைக்கும் பேராற்றல் பெற்று
காவல்பணியிலும் களமிரங்கி கால்பதித்து நடந்துவரும்
எங்கள் கனவென்று மாறுமோ ! நினைவு என்று நீங்குமோ
நிரந்தரம் தான் எங்கள் கனா ! அது பகலிலே
கண்ட  கனா வாய்  பலிக்காமல் போய்விடுமோ
இப்படியெல்லாம் நித்தம் நித்தம் புலம்புகின்ராய்,
வருமையோடு  நித்தம் யுத்தம் புரிகின்றாய்
முடியப்போகுது உன் புலம்பல்,பலிக்கப் போகுது
உன் கனவு,படியப்போகுது உன் நினைவு
துப்பாக்கியில் இருந்தோம் இரு குழலாய்
இனி ஆவோம் ஒரே குழலாய் !
ஓங்கி ஒலிப்போம் உலகமெல்லாம்
தோல்வி இனி உனக்கில்லை
துடிப்பாய் இருந்திடு  தோழனே !
தேதி இனி ஏழுக்கு மேல் சம்பள பாக்கி இராது
பாக்கியாய் இருக்கும் அரியர்சும் பட்டென
வந்து சேருமே ,EPF பும் ESI யும்
இனிமேல் முறையாய் ஆயிடுமே  
பத்தாயிரம் சம்பளம் இது முத்தாகக் கிடைத்திடும்
இதுதான் முடிவா என்றா லில்லை ……………இல்லை......
வேலைக்கு சமமாய் ஊதியம் பெற்றுத் தீருதல் ஒன்றே
தீர்வாகும் , இதுதான் எமது முடிவாகும்
இடப்பக்கம் செல்லும் என் இனிய தோழனே ! முன்னேறி
”செல்லப்பா” உன்பாதையிலே, வெல்லப்பா உன் கொள்கைதனை
உன் பக்கம் நியாயம் இருக்க ,நாமும் உன்பக்கமிருக்க
ஏனிந்தசலசலப்பு எதர்கிந்த மனச் சலிப்பு
தோல்வி இனி உனக்கில்லை துவண்டிடாதே தோழனே
சிட்டுக்குருவிகள் கூட சிக்காமல் போய்விடலாம்
விட்டில் பூச்சிகளாய் வீழ்ந்துவிடமாட்டீர்கள்
ஏட்டில் எழுதியது இல்லாமல் போய்விடாது
காட்டில் லுள்ள மரங்கள் கூட வயதானால்
கழிந்துவிடும் ,நாட்டில்லுள்ள நம் ஊழியர்கள்
கணிசமாக கழிந்திடுவார் , அவர்பணி யில்
ஓய்வுதனைப் பெற்றுவிட்டால்,
இத்தணை நாள் பொறுத்திட்டாய் இன்னும் மொரு
ஆயிரம் நாள் எண்ணிப்பொறு  பல
ஆயிரம் பேருக்குமேல் நிரந்தரப் பணி கிடைத்திடுமே !
நிம்மதியும் வந்திடுமே ! வான்மதியும் வாழ்த்திடுமே !
நீ தேடி வந்தது பொன்மான்தான்
நீ நாடி வந்தது பொற்குவிதான்
நீ வளர்தது கூட பொற்கிழிதான்
எனும் காலம் வெகு தூரம் இல்லை
செங்கொடி என்றும் தாழ் ந்ததில்லை
செங்கொடி இயக்கம் என்றும் வீழ்ந்ததில்லை
போராடாமல் வெற்றி இல்லை,
போராட்டம் ஒன்றே வெற்றியின் எல்லை !!!
நாளை நமதே !! வெற்றி நமதே !!!
                      ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் ஒப்பந்த தொழிலாளர் திருப்பூர்





நம்பி கை வைப்போம்
-------------------------------------


வல்லரசு தேசத்தில் கூட
வாழ்வாதாரம் இழந்த நிலை
எம் நாட்டு மக்களுக்கோ
விலைவாசி உயர்ந்த நிலை
பரண் மேல் பருப்பு விலை
ஒரு ரூபாவாம் அரிசி விலை
தனியார் மயம் தாராள மயம்
இதுதான் இவர்களது தாரகமந்திரம்
இலவசங்கள் பல உண்டென்பார்
இவன் வசமுள்ள ஓட்டுக்காக
பல குடும்பங்கள் வறுமையில் வாட‌
சில கும்பங்களே அரசியலில் ஆட‌
போராட்டம் நடத்தகூட
போதுமான உரிமையில்லை
குண்டர்களும் தொன்டர்களும்
கும்பலாய் தாக்குகின்றனர்
குண்டு களும் தோட்டாகளும்
குறிபார்த்தே இருக்கின்றன‌
கொலையும் கொள்ளயும்
கொள்கையாகி விட்டன‌
புகைப்பதும் குடிப்பதும்
புனிதமாகிவிட்டன‌
நோய்களும் நொடிகளும்
நோகமல் உள்ளன
ம‌னித‌னே ம‌னித‌னை கொல்லும்
மனிதா‌பிமான‌ம் ம‌லிந்து விட்ட‌ன‌
இதயம் கூட இயந்திரத்தில்
இயன்குகின்றனவாம்
இப்படி நாட்டில் பிரச்சினைகளோ
ஏராளம் இதில் எங்கள்
பிரச்சினையும் தாராளம்
கம்பம் நட்டோம்
கம்பி இழுத்தோம்
காளை போல்
கை வ‌ண்டி இழுத்தோம்
சுடும் வெயிலிலும் மண்டியிட்டோம்
க‌டும் குழிகள் பல தோண்டிவிட்டோம்
சாக்க‌டையினுள் புகுந்து ப‌ல‌
ஜாயிண்டு க‌ள் அடித்துவிட்டோம்
க‌ணினியை கூட‌ க‌ச்சித‌மாய்
க‌ண்ணிய‌மாய் இய‌க்குகின்றோம்
சின்ன‌ சின்ன‌ எக்ஜேஞ்சு க‌ளுக்கு
நாங்க‌ளே இய‌க்குன‌ர்க‌ள்
ப‌ல‌ரின் வார‌ச்ச‌ம்ப‌ள‌ம் தான்
எங்க‌ளின் மாத‌ச‌ம்ப‌ள‌ம்
போராட்டம் பல செய்தோம்
பொருமையாய் இருந்திட்டோம்
ச‌ங்க‌த்தின்மேல் ந‌ம்பிக்கை
வைத்தோம் ச‌ம்ப‌ளத்தில்
உய‌ர்வு பெற்றோம்
முருகையா,செல்லப்பா
மீது ந‌ம்பிக்கை வைத்தோம்
அவர்களும் ந‌ம்பி _கைவைத்தார்கள்
நல் அங்கிகார‌ம் பெற்று த‌ந்தார்கள்
அரிய‌ர்சும் வாங்கி த‌ந்தார்கள்
தோழ்கொடுக்கும் தோழமையை
தொடர்ந்து வணங்குவோம்
ப‌ணி நிர‌ந்த‌ர‌ம் என்ப‌தும்
நிக‌ழ்கால‌த்திலேயே நிக‌ழ்துவிடும்
ந‌ம்பிக்கையோடு இருப்போம்
நிம்ம‌தியோடு இருப்போம்
செங்கொடி என்றும்
தாழ்ந்த‌தில்லை
செங்கொடி இய‌க்க‌ம்
என்றும் வீழ்ந்த‌தில்லை !
நாளை நமதே !வெற்றி நமதே!

ஐ எஸ் சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன்
திருப்பூர்