1931 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள்
காளிதாஸ்
தமிழில் முதல் பேசும் படமான காளிதாஸ் 1931-ம் வருடம் அக்டோபர் மாதம் 31-ந் தேதி சென்னை சென்டிரலில் (தற்போதய ஸ்ரீ முருகன்) (35 எம் எம்) வெளியாகியது.
இப்படத்தில் ஏறத்தாள 50 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் பெரும்பாலானவை தியாகராஜர் கீர்த்தனைகளும், இந்திய தேசிய காங்கிரஸ் பிரச்சார பாடல்களும் ஆகும். வசனங்கள் தமிழ், தெலுங்கு மற்றும் உருது மொழியில் உள்ளன.
கவி மற்றும் நாடகாசிரியர் காளிதாஸ் பற்றிய கதை. தேஜவதி அரசன் விஜயவர்மன் மகள் வித்யகுமாரி. அவரை மணம் செய்யதுகொள்ள விரும்புகிறார் மந்திரி. ராஜகுமாரி மறுக்கவே சினம் கொண்டு அவரை ஏமாற்றி மாடுமேய்க்கும் காளிதாஸுக்கு மணம் செய்துவைத்துவிடுகிறார் மந்திரி. அவள் காளியை வேண்ட, காளியின் அருள் மணமகனுக்கு கிடைக்க அவன் காளிதாஸ் ஆகிறான்.
பி.ஜி. வெங்கடேசன் காளிதாஸாகவும், டி.பி.ராஜலக்ஷ்மி இளவரசியாகவும் தோன்றினார். எல். வி. பிரசாத் கோவில் பூசாரியாக நடித்தார். பி.ஜி. வெங்கடேசன் தெலுங்கிலும், ராஜலக்ஷ்மி தமிழிலும், எல்.வி. பிரசாத் ஹிந்தியிலும் பேசி நடித்தார்கள்.
காளிதாஸ் படத்தின் நீளம் சுமார் 6000அடி. காளிதாஸ் திரைப்படத்தில் "விடாபோன்" முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதன்படி முதலில் இசை மற்றும் மற்ற ஒலிகள் ஒரு பெரிய தட்டில் ஒலிப்பதிவு செய்யப்படும். பின்னர் காட்சிகள் படமாக்கப்படும்போது உரையாடல்களுடன் இந்த தட்டில் பதியப்பட்டவையும் ஒலிக்கச் செய்யப்பட்டு இவை ஒரு மைக்ரோபோன் உதவியுடன் மறுபதிவு செய்யப்படும்.
சுதேசமித்திரன் நாளிதழில் வெளியான ‘காளிதாஸ்’ பட விளம்பரம்.
காளிதாஸ் திரைப்பட பாடல் புத்தகம்
நன்றி :சென்னை நூலகம்
காளிதாஸ்
நடிப்பு
பி.ஜி. வெங்கடேசன், டி.பி.ராஜலக்ஷ்மி, தேவாரம் ராஜாம்பாள், டி.சுஷீலா தேவி, எல்.வி. பிரசாத், ஜே. சுஷீலா, எம்.எஸ்.சப்தானலக்ஷ்மி
இயக்கம்
எச். எம். ரெட்டி
தயாரிப்பு
அர்தேஷார் இரானிதமிழில் முதல் பேசும் படமான காளிதாஸ் 1931-ம் வருடம் அக்டோபர் மாதம் 31-ந் தேதி சென்னை சென்டிரலில் (தற்போதய ஸ்ரீ முருகன்) (35 எம் எம்) வெளியாகியது.
இப்படத்தில் ஏறத்தாள 50 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றுள் பெரும்பாலானவை தியாகராஜர் கீர்த்தனைகளும், இந்திய தேசிய காங்கிரஸ் பிரச்சார பாடல்களும் ஆகும். வசனங்கள் தமிழ், தெலுங்கு மற்றும் உருது மொழியில் உள்ளன.
கவி மற்றும் நாடகாசிரியர் காளிதாஸ் பற்றிய கதை. தேஜவதி அரசன் விஜயவர்மன் மகள் வித்யகுமாரி. அவரை மணம் செய்யதுகொள்ள விரும்புகிறார் மந்திரி. ராஜகுமாரி மறுக்கவே சினம் கொண்டு அவரை ஏமாற்றி மாடுமேய்க்கும் காளிதாஸுக்கு மணம் செய்துவைத்துவிடுகிறார் மந்திரி. அவள் காளியை வேண்ட, காளியின் அருள் மணமகனுக்கு கிடைக்க அவன் காளிதாஸ் ஆகிறான்.
பி.ஜி. வெங்கடேசன் காளிதாஸாகவும், டி.பி.ராஜலக்ஷ்மி இளவரசியாகவும் தோன்றினார். எல். வி. பிரசாத் கோவில் பூசாரியாக நடித்தார். பி.ஜி. வெங்கடேசன் தெலுங்கிலும், ராஜலக்ஷ்மி தமிழிலும், எல்.வி. பிரசாத் ஹிந்தியிலும் பேசி நடித்தார்கள்.
காளிதாஸ் படத்தின் நீளம் சுமார் 6000அடி. காளிதாஸ் திரைப்படத்தில் "விடாபோன்" முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதன்படி முதலில் இசை மற்றும் மற்ற ஒலிகள் ஒரு பெரிய தட்டில் ஒலிப்பதிவு செய்யப்படும். பின்னர் காட்சிகள் படமாக்கப்படும்போது உரையாடல்களுடன் இந்த தட்டில் பதியப்பட்டவையும் ஒலிக்கச் செய்யப்பட்டு இவை ஒரு மைக்ரோபோன் உதவியுடன் மறுபதிவு செய்யப்படும்.
சுதேசமித்திரன் நாளிதழில் வெளியான ‘காளிதாஸ்’ பட விளம்பரம்.
காளிதாஸ் திரைப்பட பாடல் புத்தகம்
1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 |
1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 |
No comments:
Post a Comment