<==============================================================================================================>
சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............ >>>>>>>>>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>சொந்தங்களை ரொம்ப பிடிக்கும் , ஆனால் நெருங்கிய உறவுகள் ஏனோ நெருங்காமல் போனது............>>>>>>>>>>> -
<===============================================================================================================>
10 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரி ந்த தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன்..............----------========== >>>>>சொன்னவர் எழுத்தாளர் சுப்பிரபாரதி மணியன்
<==============================================================================================================>
வலை பதிவை வா சிக்க...... வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் <<<<<<<<<<<<<<<<<<-----------------------------
<===============================================================================================================>

எனக்கு பிடித்த ”கவியரசன்”

எனக்கு பிடித்த ”கவியரசன்”
கவிக்கடல் கண்ணதாசன் (கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா.. இதை உணர்ந்து கொண்டேன்.துன்பம்மெல்லாம் விலகும் கண்ணா......) )

Sunday, December 16, 2012

இணையதளங்கள் கழிப்பறையா, சுதந்திர உலகமா ?


இணையதளங்கள் கழிப்பறையா, சுதந்திர உலகமா ? திருப்பூரில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்ச்செடி என்ற அமைப்பின் முதல் விழா கடந்த 9.12.2012 அன்று திருப்பூர் செண்பகம் மக்கள் சந்தை என்ற வணிக வளாகத்தில் காலை பத்து மணி அளவில் நடைபெற்றது. அன்று விழாவில் திருப்பூரைச் சேர்ந்தவரும், வெகுஜன பத்திரிக்கை உலகில் அறிந்த, இலக்கிய எழுத்தாளர்களின் வட்டத்தில் அதிக அறிமுகமான எழுத்தாளர் திரு. சுப்ரபாரதி மணியன் அவர்களின் சிறப்புரையின் முழு வடிவம் இது. தமிழ்ச்செடியின் டிசம்பர் மாத விழாவின் சார்பாக இணையமும் தமிழும் என்று கொடுத்து இருந்தோம். எங்கள் அழைப்பை ஏற்று தமிழ்ச்செடி விழாவை சிறப்பித்த எழுத்தாளர் திரு. சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு மிக்க நன்றி. உள்ளூர் படைப்பாளிகளை ஆதரிக்கும் அவரின் கரங்களை வலுப்படுத்த அவரை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் 94 86 10 1003. தினந்தோறும் மாலை ஆறு மணிக்கு மேல் அவரை தொடர்பு கொள்ளலாம். திரு.சுப்ரபாரதிமணியன் அவர்களின் வலைதளம் அவரது பேச்சின் முழுமையான வடிவம். திருப்பூரில்“ தமிழ்ச்செடி” என்ற இணைய தள பதிவாளர்களின் கூட்டமைப்பு மாதந்தோறும் இணையதளம் சார்ந்த பகிர்விற்காக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்கின்றது. மாதம் ஒரு இணையதள பதிவாளரை தேர்ந்தெடுத்து பரிசும் வழங்க நினைத்துள்ளது. இந்த விழாவை இனி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை விழா நடத்தி இரண்டு பதிவர்களைகளை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்க முடிவு செய்துள்ளது. இந்த இளைஞர்களின் முயற்சிக்கு என்னாலன அத்தனை உதவிகளையும் செய்ய தயாராக இருக்கின்றேன். இணையத்தில் தமிழ் மொழி குறித்து அக்கறை கொண்ட இந்த இளைஞர்களை நான் முதலில் பாராட்டுகின்றேன். இந்தப் பணி தொடர்ந்து நடக்க வேண்டும் என்று வேண்டுகோளையும் இந்த சமயத்தில் வைக்கின்றேன். இம்மாதம் பரிசு பெற்றவர். மதுரை மணிவண்ணன் அவர்கள். எழுத்தாள நடை எதுவும் இல்லாமல் வட்டார வழக்கு மொழியில் தனக்கு தோன்றியவற்றை தன் மொழியில் எந்தவித அவசரமின்றி இயல்பாக பல கட்டுரைகளை படைத்துள்ளார். வட்டார வழக்கு என்பது தற்போது தேய்ந்து கொண்டே வருகின்றது. திரு. மணிவண்ணன் அவர்கள் அது போன்ற ஒரு தளத்தில் நின்று தான் பார்த்த சமூகத்தை பல இடங்களில் பதிவு செய்துள்ளார். அவர் இன்னமும் தன் பார்வையை விரிவாக்கி முடிந்தவரைக்கும் எழுத்துலகில் பல முயற்சிகளை செய்ய வேண்டும் என்று நினைவு படுத்த விரும்புகின்றேன். தமிழ்ச்செடியின் இந்த டிசம்பர் மாதக்கூட்டதிற்கு தலைமை பொறுப்பில் இருக்கும் மக்கள் சந்தை.காம் நிறுவனர் சீனிவாசன் அவர்களின் முயற்சியை பாராட்டுகின்றேன். இளைஞர்களுக்கு இடமும் கொடுத்து அவர் பணிகளுக்கு இடையே இங்கு வந்து அமர்ந்திருப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழ்மொழி சார்ந்த இது போன்ற விழாக்கள் அதிகம் நடக்க வேண்டும். ஆங்கில மொழிக்குப் பினனால் இன்றைய உலகமே சென்று கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இளைஞர்களுக்கு தனது தாய் மொழி ஆர்வத்தை அளிக்கும் அவரின் செயல்பாடுகள் இன்னமும் விரிவடைய வேண்டும். அவர் இந்த விழாவிற்கு தலைமை ஏற்றிருப்பது மிக பொருத்தமான ஒன்று. இணைய தள பதிவாளர்கள் தேவியர் இல்லம் ஜோதிஜி, நிகழ்காலத்தில் சிவா, உலகசினிமா ரசிகன் பாஸ்கரன், மெட்ராஸ்பவன் சிவக்குமார், தோத்தவண்டா, அரூர் மூனா செந்தில், ஈரோடு ச்சிமோகன்குமார், வீடு சுரேஸ், இரவு வானம் சுரேஷ், கோவை மு.சரளா, தொழிற்களம் அருண் போன்றவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். இன்றைய தினத்தில் நாம் படிக்கும் இணையதளங்கள் கழிப்பறையா, இல்லை இதுவொரு சுதந்திர உலகமா என்ற சர்ச்சையை கிளம்பியுள்ளது. குறிப்பாக பாடகி சின்மயி வழக்கில் திருப்பூரைச் சார்ந்த ராஜன்லீக்ஸ் கைது செய்யப் பட்ட போது பல இடங்களிலும் இது குறித்த விவாதம் அதிகமாகியுள்ளது. அது இன்னமும் தீவிரமாகியுள்ளது. இந்த செயல்பாடுகள் இரண்டு முனை உள்ள கூர்மையான கத்தியை நமக்கு நினைவு படுத்துவதாக உள்ளது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் சுதந்திரக்குரலுக்கு மறுக்கப்படும் சூழ்நிலை தான் தொடக்கம் முதலே நிலவிக் கொண்டு வருகின்றது. அதுவே தான் இன்று வரையிலும் இணையம் வரைக்கும் வந்து சேர்ந்துள்ளது. எனக்குத் தெரிந்து தமிழின் முன்னோடியான இணையதளமான திண்ணை.காம் தொடர்ந்து கோ.ராஜாராம்,சிவகுமார் போன்றோரால் திறமையாக நட்த்தப்பட்டு இணையத்தில் எழுதுபவர்களுக்கு அதுவொரு சிறந்த ஜனநாயக மேடையாக அமைந்து வருகிறது. சுஜாதா, கோ ராஜாராம் முயற்சியால் வெளிவந்த கணிணி சார்ந்த நூல்கள் அப்போது தமிழுக்கு புது வரவாக அமைந்தன. நம் நினைவில் வாழும் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் என் “ அப்பா “ தொகுப்பிற்கு முன்னுரையை 30 பக்க அள்வில் கணிணி அச்சடிப்பில் பூச்சிபூச்சியான் எழுத்துக்களில் அனுப்பிய போது என் வீட்டின் புதுக் குழந்தையை பார்ப்பது போல பார்த்திருக்கிறேன். சுஜாதா கணிணி சார்ந்த தொழில்நுட்பக்கலைஞராக இல்லாமல் பலருக்கு எழுத்தாளராகவே தெரிந்திருக்கிறார். ஆனால் எழுத்தாளர் சுஜாதா இன்றைய இளைய சமூகம் வரைக்கும் ஆதர்ஷண எழுத்தாளராகவே திகழ்ந்து வருகின்றார். அவரின் எந்த எண்ணமும் ஒரு தனிப்பட்ட வட்டத்திற்குள் இல்லாமல் பரந்து பட்ட நின்ற காரணத்தால் இது சாத்தியமாகி உள்ளது. குறிப்பாக விஞ்ஞான சிந்தனைகளை அதிகம் விதைத்தவர்களின் அவரும் நமக்கு ஒரு முன்னோடியாக இருக்கின்றார். 15 ஆண்டுகளுக்கு முன்னால் சிங்கப்பூரில் நான் கோவிந்தசாமியைச் சந்தித்த போது அவரின் இலக்கியப் படைப்புகளை முன் வைத்து எழுத்தாளராகவே பார்த்தேன். ஆனால் கணிணி மென் பொருள் சார்ந்து அவரும் நிறைய அப்போது இயங்கினார். சென்றாண்டில் மலேசியா கோலாலம்பூரில் நான் சந்தித்த முத்து நெடுமாறன் தமிழ் மென்பொருள் சார்ந்தும் அதையொட்டி வெவ்வேறு மொழிகள் சார்ந்த மென்பொருட்கள் சார்ந்தும் நிறைய உழைத்திருக்கிறார். இவர்களைப் போல பல் நூற்றுக்கணக்காண புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ் மென்பொருள் சார்ந்து உலகமெங்கும் உழைத்து இன்றைய இணைய் தள உபயோகத்தை சுலபமாக்கியிருக்கிறார்கள். 5 ஆண்டுகளுக்கு முன் என் அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிகத் தொழிலாளியான சுந்தரக்கண்ணன் அவரின் உத்தியோக அலுப்பை மீறி கண்ணியில் தொடர்ந்து ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார். அவர் எனக்கென்று ஒரு இணைய தள பக்கத்தை ஏற்படுத்துவதாக சொன்னபோது நான் அதில் அதிக அக்கறை காட்டவில்லை. செலவு எதுவும் இல்லை என்று அவரே ஒரு வலைதளம் ஆரம்பித்து தந்த போது தான் அதன் அருமையை உணர்ந்ததேன். அது எனக்கு மிகவும் தேவையானதாக உணர்ந்தேன். தமிழில் டைப் செய்ய ஈ கலப்ப்பை போன்றவற்றைக் கற்றுக் கொண்டு படைப்புகளை மின் தளங்களுக்கு அனுப்பியபோது அவை மாற்றம் பெற சிரமம் இருந்த்தால், தமிழ் முரசு பின்பு கை கொடுத்தது. தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் டைப் செய்வது இன்றும் பல மனத்தடைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. நான் இணைய தளத்திற்கென்று பெரும்பாலும் எழுதுவதில்லை. இதழ்களுக்கு எழுதுவதே இணைக்கப்படுகிறது. தாளில் அச்சடிக்கப்படுவதை படிப்பதே சிறந்தது என்ற மூடநம்பிக்கையைக் கொண்டிருக்கிறவர்கள், அவர்கள் மனதளவில் இன்னும் தேங்கியபடியே இருக்கிறார்கள். அதை மீறின ஜனநாயக மேடையாக இன்றைய இணையதளங்கள் விளங்குகின்றன. அந்த மூட நம்பிக்கை தமிழகத்தில் இன்னும் அதிகமாக இருக்கிறது. பண்டிதர்களிடமிருந்து தமிழ்க்கவிதை விடுபட்டு புதுக்கவிதையின் எழுச்சியால் புதுக்கவிதை தொகுப்புகளின் அபரிமிதமான வெளியிடலும் கோவை வானம்பாடி இயக்கத்தினரின் வெளிப்பாடும் எழுப்துகளில் புதுக்கவிதையை தனித்துக் காட்டியது. தொழில்நுட்ப வளர்ச்சியால் குறும்படங்களின் தயாரிப்பு முயற்சிகள் 90 களில் இன்னொரு வகை சாதனையாக மிளிர்ந்தது. அதே தொழில் நுட்பம் இணையதளங்கள் மூலம் லட்சக்கணக்கான படைப்பாளிகளை இன்று உருவாகியுள்ளது. இன்று தனது தாய் மொழியான தமிழ் படிக்காமலேயே எவர் வேண்டுமானாலும் பட்டம் வாங்கி விடலாம். தமிழகத்தில் உள்ள நிலையில் மெட்ரிக் பள்ளிகளின் ஆதிக்கம், ஆங்கில பயன்பாடு மீறி புதிய தலைமுறையினரை தமிழ்ச்செடி இணைய தளத்தில் தமிழில் தங்கள் தாய் மொழி சார்ந்த அனுபவங்களை எழுத வைத்திருப்பது நல்ல விசயமே. பின்நவீனத்துவ காலகட்டம் எழுத்தாளன் என்ற பீட பிம்பத்தை உடைத்து வாசகர்களின் பங்களிப்பையும்,வாசகர்களை எழுத்தாளர்களாக உயர்த்தியிருப்பதையும் சுட்டிக் காட்டலாம். எழுத்தாளன், சிஷ்யப்பரம்பரை என்பது ஒழிந்து விளிம்பு நிலை மக்களே தங்கள் குரலில் பதிவு செய்யும் மேடையாக இணைய தளங்கள் இன்றைக்கு வளர்ந்துள்ளன.. எழுத்தாளன் இல்லாமல் போக பிரதிகளின் குரல் தயவு தாட்சண்யமற்று பல்வேறு துறைகளிலும் ஒலிக்கிறது. வட கிழக்கு இந்தியாவில் மலைப்பிரதேசவாசிகளுடன் வசித்து வந்த தமிழ நண்பர் ஒருவர் அங்கு கண்ட ஒரு பழக்கத்தை இன்றும் இங்கு வந்த் பின்பும் கடை பிடிக்கிறார். மாதந்தோறும் குடும்ப உறுப்பினர்கள் உட்கார்ந்து அவர்கள் ஒரு பெட்டியில் அந்த மாதம் எழுதிப்போட்டிடுருக்கும் பல செய்திகளை, சந்தோச விசயங்களை , புகார்களை, வருத்தங்களை பகிர்ந்து கொள்வதாகும் அது,. அது போல் பழங்குடி மரபின் தொடர்ச்ச்சியாய் இணைய தளங்களின் மூலமான பகிர்வு வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை பல்வேறு பரிணாமங்களுடன் இன்றைக்கு காட்டும் ஜனநாயக வெளியை உருவாக்கி யிருக்கிறது. இதில் தமிழ் இளைஞர்கள் அக்கறையுடன் தமிழில் எழுதி ஈடுபடுகிறார்கள் என்பது பெரிய சாத்னைதான். திருப்பூர் போன்ற ஊர்களில் பல்வேறு தொழிலில் உள்ளவர்களையும், பல துறை சார்ந்தவர்களையும் இது போன்ற விழாவிற்கு ஒருங்கிணைப்பதே மிகப் பெரிய சவாலாகும். ஆனால் இந்த அமைப்பின் இளைஞர்கள் இன்று சாதித்துக் காட்டியுள்ளார்கள். தமிழ் மொழி என்பது காசு சம்பாரிக்க உதவாது என்பதான இன்றைய பொருள் சார்ந்த சமூகத்தில் நமக்கான அடையாளங்களை மீட்டெடுக்க இது போன்ற கலந்துரையாடல் நிச்சயம் உதவும். இந்த இளைஞர்களுக்கு என் பாராட்டுதலை மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். கடந்த 25 ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள இளம் படைப்பாளிகள், மற்றும் எழுதும் ஆர்வமுள்ளவர்களை என்னளவில் எங்கள் கனவு என்ற இலக்கிய இதழ் மூலம் அறிமுகம் செய்து வைத்துக் கொண்டு இருக்கின்றோம். மாதம் தோறும், வருடந்தோறும் இலக்கிய உலகில் உள்ள பலரையும் திருப்பூருக்கு அழைத்து வந்து உரையாற்றச் செய்கின்றோம். ஆனால் தற்போது இந்த இளைஞர்கள் இது போன்ற விழா நடத்த முயற்சித்துருப்பது எனக்கு தனிப்பட்ட வகையில் மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. இந்த விழாவிற்கு அழைத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியும் பாராட்டும். நன்றி.